மிரட்டல் லுக்கில் ராஷ்மிகா

37

ராஷ்மிகா கடைசியாக தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான குபேரா படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் கலவையான விமர்சனத்தையும் தெலுங்கில் நலல் வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்படத்தை தவிர்த்து, தி கேர்ள் ஃபிரண்ட் என்ற தெலுங்கு படத்தை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் ராஷ்மிகா நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைசா என்ற தலைப்பில் அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக  அறிமுகமாகிறார். படத்தின் அறிவிப்பை தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை தெலுங்கில் இயக்குநர் ஹனு ராகவபுடி, தமிழில் தனுஷ், இந்தியில் விக்கி கௌஷல், மலையாளம் மற்றும் கன்னடத்தில் துல்கர் சல்மான் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

ஃபர்ஸ்ட் லுக்கில்,  ஒரு பாரம்பரிய புடவையில், பழங்குடி நகைகள் மற்றும் மூக்குத்தியுடன் காட்சியளிக்கும் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்தில் முற்றிலும் புதிய மற்றும் பயமுறுத்தும் முகபாவனையுடன் காட்சியளிக்கிறார். இப்படத்தின் முக்கிய தொழில்நுட்பக் குழுவினரை  பற்றிய விவரங்களை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக படக்குழு  தெரிவித்துள்ளது.

 

இதையும் படியுங்கள்
Subscribe