அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் விஜய் தேவரகொண்டா. குறிப்பாக அவருடைய படங்களுக்கு தமிழ் மக்களிடமும் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போத் அவரது நடிப்பில் உருவாகி வரும் படம் டியர் காம்ரேட். இந்த படம் நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
பாரத் கம்மா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைகிறார். இந்த மாத இறுதியில் இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று சொல்லப்படும் நிலையில், சமீபத்தில் ட்ரைலர் வெளியிடப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஜூலை 26ஆம் தேதி இப்படம் நான்கு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தானா கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார். மேலும் இதில் அவர் கிரிக்கெட் விளையாடுவது போன்று 10 நிமிடங்களே காட்சிகள் வருகிறதாம். ஆனால், அந்த 10 நிமிட காட்சியில் அவர் உண்மையான பெண் கிரிக்கெட் வீராங்கனையாக இருக்க வேண்டும் என்பதற்காக சுமார் 4 மாதங்களுக்கு மேலாக கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொண்டாராம்.