ரசிகர்களிடம் ஐடியா கேட்கும் ராஷ்மிகா!

rashmika

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போதுதெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தானா, கார்த்தியுடன் சுல்தான் என்னும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் தற்போதுதான் அறிமுகமாகிறார் என்றாலும் அவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக பல துறைகள் முடங்கப்பட்டுள்ள நிலையில் சினிமா துறை ஷூட்டிங்கும் முடங்கியுள்ளது. தற்போதுதான் சில நிபந்தனைகளுடன்ஷூட் செய்ய அரசாங்கம் ஒப்புதல் வழங்கி வருகிறது. ஆனால், தமிழகத்தில் சினிமா ஷூட்டிங்கிற்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இந்நிலையில் தேசிய ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஆக்டிவாக இருக்கின்றனர். ட்விட்டரில் தனது ரசிகர்களிடம் கலந்துரையாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தானா, “எதிரகாலத்தில் நான் எந்த மாதிரியான படங்களில், கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்? பதிலுக்காக நான் ஆவலாக இருக்கிறேன்” என்று ரசிகர்களிடம் ஐடியா கேட்டுப் பதிவிட்டுள்ளார்.

rashmika mandana
இதையும் படியுங்கள்
Subscribe