“நான் தியேட்டரில் பார்த்த முதல் படம் கில்லி”- ராஷ்மிகா மந்தானா

rashmika

கடந்த 2016ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்னும் கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தானா. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தது பெரும் வரவேற்பைப் பெற, தமிழில் நடிக்காமலே தமிழகத்தில் ரசிகர்களைச் சம்பாதித்துள்ளார்.

’ரெமோ’ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் காத்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம்தான் தமிழில் ராஷ்மிகா மந்தானா அறிமுகமாக இருக்கிறார். ஆனாலும், அவருக்கு இங்கு ட்விட்டரில் இன்ஸ்டாகிராமில் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தமிழ் ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில் தேசிய ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் சமூக வலைத்தளங்களின் வாயிலாக நடிகர்கள் தங்களின் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். அதுபோல யாராவது தங்களை டேக் செய்து கேள்விகள் எழுப்பினாலும் அதற்குப் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவிடம், நீங்கள் பார்த்த முதல் படம் எது? என்று கேட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த ராஷ்மிகா, “நான் தியேட்டரில் பார்த்த முதல் படம் கில்லி. அப்போது என்னுடைய அப்பாதான் நிறைய படங்கள் பார்ப்பார். அவர்தான் என்னை அழைத்துச் சென்றார். நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

rashmika mandana
இதையும் படியுங்கள்
Subscribe