Advertisment

பா.ரஞ்சித் படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா

rashmika mandanna Will Be Female Lead Chiyaan61 Directed  Pa Ranith

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா', மணிரத்னத்தின் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள விக்ரம் அடுத்தாகபா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைஸ்டூடியோக்ரீன்நிறுவனம் சார்பில் கே.இஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ஜி. வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இப்படம் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் காலகட்டத்தில் 'கே.ஜி.எஃப்' - பில்நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளது.

Advertisment

இந்நிலையில் சியான் 61 படத்தின் கதாநாயகி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகளை முடித்த பிறகு சியான் 61 படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

Pa Ranjith actor vikram chiyaan 61 rashmika mandana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe