rashmika mandanna tell about her dream boy

புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் அல்லு அர்ஜூன். ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் பங்கேற்றார்.

அந்நிகழ்ச்சியில் ராஷ்மிகா மந்தனா பேசுகையில், “என்னுடைய வாழ்க்கையை புஷ்பா படத்திற்கு முன், பின் என்று எடுத்துக் கொள்ளலாம். 7 வருஷம் சினிமா துறையில் இருக்கிறேன். அதில் 5 வருஷம் புஷ்பா படத்தில் நடித்திருக்கேன். புஷ்பா 2 ரிலிஸ் ஆகிவிட்டால் எப்படி ரியாக்ட் செய்வது எனத் தெரியவில்லை. ரொம்ப மிஸ் பண்ணப் போகிறேன். அந்தளவிற்கு புஷ்பா படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலானது” என்றார்.

அதைத் தொடர்ந்து தொகுப்பாளர்கள் ராஷ்மிகாவிடம் உங்கள் ட்ரீம் பாய் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு அவர், “சாக்லெட் மற்றும் ரக்கட் குணங்கள் கலந்த பையனாக இருக்க வேண்டும்” பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம் அந்த பையன் சினிமாத்துறையில் இருப்பவரா? அல்லது மற்ற துறையினரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராஷ்மிகா, “இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்” என்று வெட்கப்பட்டு சிரித்தபடி பதிலளித்தார். அப்போது ஸ்ரீ லீலா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலரும் சிரிப்பலையில்மூழ்கினர்.