/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/99_20.jpg)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் வரும் 13 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை தொடர்ந்துநடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளஇப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்தஅறிவிப்பைபடக்குழு வெளியிட்டுள்ளது அதன்படி, 'தளபதி 66 படத்தில்' விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகாமந்தனா நடிக்கவுள்ளார். கீதா கோவிந்தம் படத்தின்மூலம் பிரபலமான ரஷ்மிக்காமந்தனா தமிழில் கார்த்தியுடன்சுல்தான் படத்தில் நடித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது. ரஷ்மிகாமந்தனாவின் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்குபிறந்தநாள் ட்ரீட்டாக மாறியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)