/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/209_2.jpg)
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைசன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் பீஸ்ட் படத்தை திரையரங்கில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்துநடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளஇப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.
இந்நிலையில் 'தளபதி 66' படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாகவுக்கும், படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)