Advertisment

‘வாயா சாமி... மன்மத சாமி...’ - திகைத்துப் போன ராஷ்மிகா மந்தனா!

Rashmika Mandanna gets warm welcome in Tokyo

Advertisment

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாகடைசியாக பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் பான் இந்தியாஹீரோயினாக அறியப்படுகிறார் ராஷ்மிகா. இப்போது தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், டோக்கியோவில்8வது க்ரஞ்சி ரோல் அனிமி விருது விழா நாளை (02.03.2024) நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு விருது வழங்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதற்காக மும்பை விமான நிலையத்திலிருந்து டோக்கியோவுக்கு சென்றார். டோக்கியோவில் இறங்கிய அவர், புஷ்பா படத்தில் அவர் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் உள்ளிட்ட அவரது புகைப்படங்களுடன் ரசிகர்கள் நின்றுகொண்டிருந்ததை பார்த்தார். 10க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பைக் கண்ட ராஷ்மிகா திகைத்துப் போய் நின்றார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக அல்லு அர்ஜுன் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

tokyo rashmika mandana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe