Advertisment

முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna first movie as lead role titled as rainbow

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, இந்தியில் அமிதாப்பச்சனின் 'குட் பை' மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவின் 'மிஷன் மஜ்னு' உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டிலும் கவனம் பெற்றுள்ளார். இப்போது இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'அனிமல்' படத்திலும் தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு 'புஷ்பா 2' படத்திலும் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின் நடிப்பில் உருவாகும் புது படத்தில் நடிக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் ராஷ்மிகா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைதயாரிக்கிறது. ‘ரெயின்போ’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படம் ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. சாந்தரூபன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் தேவ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் 7 அன்று ஆரம்பமாகிறது.

Advertisment

இப்படம் பற்றி தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கூறுகையில், "வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு படைப்பாக ரெயின்போஇருக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களின் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஏகோபித்த வரவேற்பையும்வாழ்த்தையும் தந்து வரும் ரசிகர்கள்ரெயின்போவையும் அதே அளவு ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். படத்தின் அற்புதமான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதைச் சாத்தியமாக்குவார்கள்" என்றார்.

நடிகை ரஷ்மிகா பேசுகையில், "ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்" என்று கூறியுள்ளார்.

sr prabhu rashmika mandana
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe