உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தளப் பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது நடிகை ராஷ்மிகா மந்தானா கரோனா குறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

"உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல பிரகாசிக்கட்டும். ஒரு நொடி கூட மங்க விடாதீர்கள். நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம். நாம் வெற்றி பெறுவோம். நான் இதைச் சொல்லிக் கொண்டே இருக்கக் காரணம் நமக்கு வேறு வழி இல்லை. உங்களால் முடிந்தவரை யாருக்கெல்லாம் முடியுமோ உதவுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து நின்று இதைக் கடப்போம்" எனக் கூறியுள்ளார்.