Rashmika Mandanna asks rs 1crose in rc15 film

Advertisment

திரையுலக நடிகர், நடிகைகள் தாங்கள் நடித்த படம் வெற்றிப் பெற்றால் சம்பளத்தை உயர்த்துவது வழக்கம். சமீப காலமாக சில முன்னணி நடிகைகள் தங்களின் சம்பளத்தை அதிகமாக உயர்த்தியுள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சம்பளத்தை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பெற்ற பெரும் வெற்றியின் காரணமாக ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c874b3e6-4a9f-474a-80d6-b963a69a8b9f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_1.jpg" />

இந்நிலையில் நடிகை ராஷ்மிகாமந்தனா ராம் சரண் படத்தில் அரை மணி நேரம் வரும் ஒரு பேட்டி எடுக்கும் காட்சியில் நடிக்க ரூ.1 கோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'ஆர்.சி15'என்ற படத்தில் நடிகர் ராம் சரண் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தில் ராம் சரணை பேட்டி எடுப்பது போன்றகாட்சிகள் இடம்பெறுகிறது, இதில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவை படக்குழு அணுகியதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த அரை மணி நேர காட்சியில்நடிக்க ராஷ்மிகாமந்தனா ரூ.1 கோடி கேட்டதாகவும், படக்குழுவும் கேட்ட தொகையை தர ஒப்புக் கொண்டதாகவும்டோலிவுட் சினிமா வட்டாரங்கள் முணுமுணுத்து வருகின்றனர்.