Rashmika Mandanna about animal movie

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒருபடத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

தென்னிந்திய மொழிகளைத்தாண்டி இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.அந்த வகையில், இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'அனிமல்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க, அண்மையில் படத்தின் டீசர் ப்ரோமோ வெளியானது. விரைவில் டீசர் வெளியாகவுள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'அனிமல்' படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் ராஷ்மிகா.இது தொடர்பாக உருக்கமாக ஒரு பதிவினை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்தப் படவாய்ப்பு திடீரென வந்தது. படத்தில் பணியாற்ற மிகவும் ஆவலுடன் இருந்தேன். மொத்தம் 50 நாட்கள் நடித்துள்ளேன் என நினைக்கிறேன். என்னுடன் படப்பிடிப்புத் தளத்தில் பணிபுரிந்த அனைவருமே மிகவும் அன்பானவர்கள். அவர்களுக்கு எப்போதும் என் இதயத்தில் சிறப்பிடம் உண்டு. அவர்களுடன் இன்னும் 1000 முறை பணியாற்ற வேண்டும் என ஆசை. அது நடந்தாலும் அப்போதும் நான் மகிழ்ச்சியாகவே இருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.