Rashmika Mandanna in 2024 Forbes India list of 30 under 30

ஃபோர்ப்ஸ் இதழின் இந்திய பிரிவான ‘ஃபோர்ப்ஸ் இந்தியா’2014 ஆம் ஆண்டிலிருந்துபல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்,இந்தாண்டிற்கான பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் 30 வயதிற்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில்மொத்தம் 19 பிரிவுகள் இருக்கும் நிலையில், பொழுதுபோக்கு துறையில் ராஷ்மிகா மந்தனா(27)மற்றும் ராதிகா மதன் (28) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் இசைத்துறையில் அதிதி சைகல் (25) என்கிறபாடகி இடம்பெற்றுள்ளார். இவர்களுக்கு தற்போது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதில் தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் கடந்த வருடம் வாரிசு, மிஷின் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் 51வது படம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, லீட் ரோலில்ரெயின்போ உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.