gkfg

கடந்த 2016ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்னும் கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தது பெரும் வரவேற்பைப் பெற, தமிழில் நடிக்காமலே தமிழகத்தில் ரசிகர்களைச் சம்பாதித்தார் ராஷ்மிகா.

Advertisment

Advertisment

இதையடுத்து தமிழில் ’ரெமோ’ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் காத்திக்கு ஜோடியாக ராஷ்மிகா தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை ராஷ்மிகா மந்தானா, தன் வளர்ச்சி குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... ''நீங்கள் வளர உதவும் நபர்களை எப்போதும் தேர்வு செய்யயுங்கள். உள்ளேயும், வெளியேயும் - உங்கள் இதயம், உங்கள் அறிவு மற்றும் உங்கள் ஞானத்தை வளர்ப்பவராக இருக்கவேண்டும். அவர்களைத் தேர்வு செய்யயுங்கள். அவர்கள்தான் உங்கள் நேரத்திற்கு மதிப்புள்ளவர்கள்!'' எனப் பதிவிட்டுள்ளார்.