rashmika mandana speech trolled by fans

Advertisment

தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, அமிதாப்பச்சனின் 'குட் பை' படத்தின் மூலம் இந்தி திரையுலகிலும் காலடி வைத்தார். இப்போது, விஜய்யின் வாரிசுபடத்தில் நடித்து முடித்துள்ள ராஷ்மிகா.இந்தியில் 'மிஷன் மஜ்னு', 'அனிமல்' மற்றும் தெலுங்கில் 'புஷ்பா 2' படத்தில் நடிக்கிறார்.

இதில் 'மிஷன் மஜ்னு' படம் அடுத்த மாதம் 20ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் 'ரப்பா ஜாண்டா' பாடலின் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் ராஷ்மிகா பேசியது தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.அவர் பேசுகையில், "நான் வளரும்போதுகாதல் பாடல்கள் என்றால் அது பாலிவுட் பாடல்கள்தான். தென்னிந்திய மொழிகளில் மாஸ் மசாலா, குத்து பாடல்கள், கவர்ச்சி பாடல்கள்தான் அதிகம் இருக்கும். எனவே 'ரப்பா ஜாண்டா' பாடல் எனது முதல் பாலிவுட் காதல் பாடல், பாடல் நன்றாக வந்துள்ளதால் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றார்.

ராஷ்மிகாவின் பேச்சு குறித்து, பாலிவுட்டில் கவர்ச்சி பாடல்கள் இடம் பெறவில்லையா... இங்கு மட்டும்தான் இருக்கிறதா என தென்னிந்திய ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் பாலிவுட் பட வாய்ப்புக்காக ராஷ்மிகா இது போன்று பேசுகிறார் என குற்றம் சாட்டுகின்றனர்.