rashmika mandana reacts aishwarya rajesh speech

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில்ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த'ஃபர்ஹானா' படம்கடந்த 12 ஆம் தேதிவெளியானது. இப்படத்தைஎஸ்.ஆர்.பிரபு தயாரித்த நிலையில்செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைபிரபலங்கள்செல்வராகவன், கார்த்தி உள்ளிட்ட பலர் படக்குழுவினரை பாராட்டிவாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment

இப்படத்தின் ப்ரொமோஷனுக்காக ஒரு நேர்காணலில் தெலுங்கு சினிமா குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருந்தார். அதில், "எனக்கு தெலுங்கு திரையுலகம் பிடிக்கும். ஆனால் மீண்டும் ஒரு நல்ல தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளிகதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த வாய்ப்பு எனக்கு வந்திருந்தால்கண்டிப்பாக நான் நடித்திருப்பேன். ராஷ்மிகா ஸ்ரீவள்ளியாக நன்றாக நடித்திருந்தார். ஆனால் நான் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பேன் என நம்புகிறேன்" என்றார்.

Advertisment

இதையடுத்து ராஷ்மிகாவை விட நான் நன்றாக நடிப்பேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின. இதனால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை உருவான நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டார். அதில், "ஒருஉதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்." எனக் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் ராஷ்மிகாஇந்த சர்ச்சை குறித்து தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில், "ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்லியிருப்பதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நம்மைபற்றி விளக்குவதற்கு எந்த காரணமும் இருப்பதாகத்தெரியவில்லை. உங்கள்மீதுஅன்பும் மரியாதையும் இருக்கிறது. ஃபர்ஹானா படத்திற்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.