கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த படம் அர்ஜூன் ரெட்டி. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான இப்படத்தை சந்தீப் வங்கா ரெட்டி இயக்கினார்.

Advertisment

rashmika

இப்படத்தை ஹிந்தியிலும் உருவாக்க திட்டமிட்டு, தெலுங்கு படத்தை இயக்கிய சந்தீப் வங்கா ரெட்டியை ஹிந்தியிலும் இயக்க திட்டமிட்டனர். ஷாகித் கபூர் மற்றும் கியாரா அத்வானி இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர். ஹிந்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

Advertisment

இப்படம் வெளியாகிய ஐந்து நாட்களில் 100 கோடியை வசூல் செய்தது. 250 கோடி வரை வசூல் செய்து, சாதனை படைத்துள்ளது. ஷாகித் கபூர் தனியாக நடித்து இத்தனை கோடி வசூல் குவித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த படத்தை தொடர்ந்து ஷாகித் கபூர் மேலும் ஒரு தெலுங்கு பட ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நானி நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தைதான் ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். இந்த படத்தில் நானி கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. ஹீரோயினாக அர்ஜுன் ரெட்டி புகழ் ராஷ்மிகா மந்தானாவை நடிக்க வைக்க பேசப்பட்டு வருகிறது.

Advertisment