rashmika manager issue

Advertisment

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக 'அனிமல்' படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் அவருடன் நீண்ட காலமாக பணியாற்றிய மேலாளர், ரூ. 80 லட்சம் மோசடி செய்ததாகவும் அதனால் அவரை வேலையை விட்டு நீக்கியாகவும் ஒரு தகவல் வெளியானது. இதையடுத்து இந்த தகவல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், "நாங்கள் இருவரும் இனிமேல் சுதந்திரமாக வேலை செய்ய முடிவெடுத்துள்ளோம். எங்கள் பிரிவை பற்றி பரவும் வதந்திகள் எதுவும் உண்மையில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ராஷ்மிகாவின் மேலாளர் பண மோசடி செய்தது உண்மைதானாம். ஆனால் இதை வைத்து எதிர்மறையான கருத்துக்கள் வெளியாவதை விரும்பாத ராஷ்மிகா அதை மூடி மறைத்து சமாளித்துள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.