கன்னடம், தெலுங்கு போதும்...இனிமே தமிழ் தான்...! கார்த்தியுடன் கை கோர்த்த கீதா கோவிந்தம் நாயகி 

karthi 19

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

வித்தியாசமான கதை களத்துடன் உருவாகி வரும் 'கைதி' படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்து புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 'கார்த்தி 19' என்று தற்சமயம் அழைக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமாகி தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. அதிகபொருள் செலவில் இப்படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், கார்த்தி ஜோடியாக 'கீதா கோவிந்தம்' புகழ் ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள்.

karthi Karthi19 rashmika
இதையும் படியுங்கள்
Subscribe