Rashmika joins lead actor following Vijay

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் 'பிரபாஸ்'. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'ராதே ஷ்யாம்' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.அடுத்ததாகஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதி புருஷ்' மற்றும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே 'அர்ஜுன் ரெட்டி' பட இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'ஸ்பிரிட்' எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'ஸ்பிரிட்' படத்தில்பிரபாஸிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா, தமிழில் 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் இந்தியில் 'மிஷன் மஜ்னு', 'குட் பை' படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே சந்தீப் வங்கா இயக்கும் 'அனிமல்' படத்தில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment