தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தானா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் கதநாயகியாக அறிமுகமாகிறார். இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் முன்னணி வேலைகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது.