கவுதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்டம்’. இந்த திரைப்படத்தை சிதாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, ஸ்ரிகாரா ஸ்டூடியோஸ் வழங்குகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தெலுங்கைத் தாண்டி தமிழ் மற்றும் இந்தியிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் திரையரங்கில் பேனர் வைத்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஹைதரபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் 70 அடி கட்டவுல் விஜய் தேவரகொண்டாவுக்கு வைக்கப்பட்டது. இதையடுத்து படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது.
இதனிடையே ராஷ்மிகா, தனது எக்ஸ் பக்கத்தில், விஜய் தேவரகொண்டாவை டேக் செய்து, “இது உங்களுக்கும் உங்களை நேசிக்கும் அனைவருக்கும் எவ்வளவு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பது எனக்கு தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாம் வென்றுவிட்டோம் என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் தெலுங்கில் ‘மனம் கொட்டினம்(Manam kottinam)’ என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் கீழ் விஜய் தேவரக்கொண்டாவும் அதே வார்த்தையை கமெண்ட் செய்து ஹார்ட் எமோஜியை பதிவிட்டுள்ளார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்னும் பொதுவெளியில் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/31/197-2025-07-31-17-37-04.jpg)