ராஷ்மிகா கடைசியாக தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான குபேரா படத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழில் கலவையான விமர்சனத்தையும் தெலுங்கில் நலல் வரவேற்பையும் பெற்றது. இப்படத்தை தவிர்த்து, தி கேர்ள் ஃபிரண்ட் என்ற தெலுங்கு படத்தை கைவசம் வைத்துள்ளார்.
இப்படங்களை தொடர்ந்து மைசா என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கடந்த மாதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பழங்குடி நகைகள் மற்றும் மூக்குத்தியுடன் கோண்ட் பழங்குடியினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தோற்றத்தில் முற்றிலும் புதிய மற்றும் பயமுறுத்தும் முகபாவனையுடன் காட்சியளித்திருந்தார்.
இப்படத்தின் பூஜை கடந்த 27ஆம் தேதி நடந்தது. இதில் படக்குழுவினருடன் பழங்குடியின மக்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், தங்களது பாரம்பரிய நடனத்தை அரங்கேற்றினர். அவர்களுடன் ராஷ்மிகாவும் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தார். இதன் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ராஷ்மிகா நடனமாடும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
With divine blessings and heartfelt wishes, #MYSAA took its first official step forward 🙏✨️
— UnFormula Films (@unformulafilms) July 29, 2025
From blessings to the smiles of the team, here's the Pooja ceremony glimpse 💫
-- https://t.co/BFHrCYS322@iamRashmika@rawindrapulle@kshreyaas#AndyLong@unformulafilmspic.twitter.com/pyKmdcQqJZ