மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் ராஷ்மிகா

Rashmika again pairs up with karthi in japan movie

ராஷ்மிகா மந்தனா தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழில் விஜய்யின் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இந்தியில், 'குட்பை', 'மிஷன் மஜ்னு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் கார்த்தியுடன் மீண்டும் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' என்ற தலைப்பில் ஒரு படம் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் கார்த்தியுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் ராஷ்மிகா மந்தனா. முன்னதாக கார்த்தியின் 'சுல்தான்' படத்தில் ராஷ்மிகா நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor karthi raju murugan rashmika mandana
இதையும் படியுங்கள்
Subscribe