rashmika adviced fans video goes viral in social media

Advertisment

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அடுத்த மாதம் வரும் பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் கடந்த 24 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவை முடித்துவிட்டு தன் காரில் புறப்பட்ட ராஷ்மிகாவை சில ரசிகர்கள் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்தனர். ரசிகர்களைப் பார்த்த ராஷ்மிகா காரை நிறுத்தச் சொல்லி, "ஹெல்மெட் போட்டுக்கோங்க..." என ரசிகர்களிடம் அறிவுரைச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.