Advertisment

''நான் அதை உறுதி செய்கிறேன்'' - ராஷ்மிகா மந்தனா அட்வைஸ்!

ugkg

கடந்த 2016ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்னும் கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தது பெரும் வரவேற்பைப் பெற, தமிழில் நடிக்காமலே தமிழகத்தில் ரசிகர்களைச் சம்பாதித்தார் ராஷ்மிகா.

Advertisment

இதையடுத்து தமிழில் ’ரெமோ’ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் காத்திக்கு ஜோடியாக ராஷ்மிகா தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை ராஷ்மிகா மந்தானா, யாருக்கு என்னை அதிகம் தெரிகிறது என்பதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''நீங்கள் அனைத்தையும் தவறாகப் புரிந்து கொண்டாலும், கடைசியான ஒன்றை (ரசிகர்களை நேசிப்பவள்) நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளவாய்ப்பேஇல்லை. நான் அதை உறுதியாகச் சொல்கிறேன். எனது அணியில் உள்ளவர்கள்கூட எல்லவற்றையும்சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைஉங்களால் நம்ப முடியுமா!'' எனக் கூறியுள்ளார்.

Advertisment

rashmika mandana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe