Published on 09/01/2019 | Edited on 09/01/2019

நடிகர் சிம்பு அடுத்ததாக சுரேஷ் காமாட்சி தயாரித்து, வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வரும் பிப்ரவரி 3ஆம் தேதி துவங்கவுள்ளது. மேலும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிககைகள் தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில் சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் அர்ஜுன் நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் பிரேம்ஜி நடிப்பதும் உறுதியாகிவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.