Skip to main content

விக்ரமுடன் இணையும் ராஷி கண்ணா?

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

Rashi Khanna

 

நடிகர் விக்ரமை வைத்து இயக்குனர் ஹரி இயக்கவுள்ள படத்தில், இளம் நடிகை ராஷி கண்ணா நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடைசியாக, 'சாமி 2' படம், 2018 -ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் இயக்குனர் ஹரி, நடிகர் சூர்யாவை வைத்து, படம் இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர் அந்தப் படத்தை தயாரிக்கவிருந்த, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும் இதை உறுதிப்படுத்தி, படத்திற்கு 'அருவா' என்று பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கரோனா நெருக்கடி காரணமாக, படத்தின் பணிகளை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டு வந்தநிலையில், கதை தொடர்பான விஷயத்தில் இயக்குனர் ஹரிக்கும் சூர்யாவிற்கு இடையே கருத்து முரண் ஏற்பட்டுள்ளதாகவும், 'அருவா' படம் கைவிடப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

 

இதனைத் தொடர்ந்து, இயக்குனர் ஹரி நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருப்பதாகச் செய்திகள் பரவின. இதன் அடுத்தகட்ட தகவலாக அந்தப் படத்தில் விக்ரமின் ஜோடியாக இளம் நடிகை ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஹரி முன்னர் இயக்கவிருந்த, 'அருவா' படத்திலும் கதாநாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

Next Story

விக்ரம் படத்தில் எஸ்.ஜே சூர்யா

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
sj suryah in in vikram chiyaan 62

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் அதுவும் தற்போது தள்ளி போகவுள்ளதாக கூறப்படுகிறது.  இதனிடையே விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் நீண்ட இழுபறிக்கு பின் இம்மாதம் வெளியாகும் என கெளதம் மேனன் தெரிவித்திருந்தார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை. 

இதனை தொடர்ந்து தனது 62வது படத்திற்காக சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாத நிலையில் தற்போது புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஜே சூர்யா தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர், ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.