Rashi Khanna

நடிகர் விக்ரமை வைத்து இயக்குனர் ஹரி இயக்கவுள்ள படத்தில், இளம் நடிகை ராஷி கண்ணா நாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடைசியாக, 'சாமி 2' படம், 2018 -ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் இயக்குனர் ஹரி, நடிகர் சூர்யாவை வைத்து, படம் இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர் அந்தப் படத்தை தயாரிக்கவிருந்த, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும் இதை உறுதிப்படுத்தி, படத்திற்கு 'அருவா' என்று பெயரிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கரோனா நெருக்கடி காரணமாக, படத்தின் பணிகளை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டு வந்தநிலையில், கதை தொடர்பான விஷயத்தில் இயக்குனர் ஹரிக்கும் சூர்யாவிற்கு இடையே கருத்து முரண் ஏற்பட்டுள்ளதாகவும், 'அருவா' படம் கைவிடப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இயக்குனர் ஹரி நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருப்பதாகச்செய்திகள் பரவின. இதன் அடுத்தகட்ட தகவலாக அந்தப் படத்தில் விக்ரமின்ஜோடியாக இளம் நடிகை ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹரி முன்னர் இயக்கவிருந்த, 'அருவா' படத்திலும்கதாநாயகியாக ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.