Skip to main content

''கரோனாவை கோமியம் குணப்படுத்தும் என்று இந்துக்களே நம்புவதில்லை'' - நடிகை ராஷிக்கண்ணா காட்டம்! 

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதற்கிடையே மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவ சோதனையில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து முஸ்லிம்களால்தான் கரோனா வைரஸ் அதிகம் பரவுகிறது என்று சமூகவலைதளத்தில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வரும் நிலையில் இதுகுறித்து நடிகை ராஷி கண்ணா டிவிட்டரில் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில்... 

 

 cbd

 

''99.99% இந்துக்கள் கோமியம் குடிப்பதில்லை, கரோனா வைரஸை கோமியம் குணப்படுத்தும் என்று அவர்கள் நம்புவதுமில்லை. 99.99% முஸ்லிம்கள் தப்லீக் ஜமாஅத் நிகழ்வை ஆதரிக்கவில்லை, அந்த நிகழ்வில் மவுலானா சாத் சொன்னதை ஏற்கவுமில்லை. கோவிட் 19 வைரஸ் மதச்சார்பற்றது. அது மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிப்பதில்லை. அது சமத்துவத்தை நம்புகிறது. ஜாதி, மதம், செல்வம், அந்தஸ்து எனத் தொடர்பிலிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பாதித்துக் கொல்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு கரோனாவுக்கு எதிரான இந்த போரில் ஒன்றாகச் செயல்படுவோம்" என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரையை கிழித்த ரசிகர்கள்; நடிகையை பாதுகாப்பாக வெளியேற்றிய தனுஷ் 

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Theater Screen Tearing Dhanush Fans

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தின் திரை ரசிகர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருந்த போது தாய் கிழவி பாடலுக்கு ரசிகர்கள் ஸ்க்ரீன் முன்பு எழுந்து ஆடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திரையரங்கு ஸ்க்ரீன் கிழந்ததாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் திருச்சிற்றம்பலம் படத்தின் அதிகாலை காட்சியை நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் ஆகியோர் படக்குழுவினருடன் பார்த்துள்ளனர். திரையரங்கில் தனுஷ்யை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் விசிலடித்து கரகோஷத்தை எழுப்பினர். மேலும், படம் முடிந்து தனுஷ் உட்பட படக்குழுவினர் வெளியேறினர். அப்போது, தனுஷ் தனது காரை நோக்கி செல்லும் வழியில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அப்போது, தனுஷுடன் அங்கு நடிகை ராஷிகண்ணாவும் உடனிருந்தார். வெளியே ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்ததால், பதட்டமடைந்த தனுஷ் அங்கிருந்த  ராஷிகண்ணாவையும் அவருடன் சேர்த்து பத்திரமாக வெளியேற்றினார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. 

 

 

Next Story

தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த உதயநிதி

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

udhayanidhi stalin said thiruchitrambalam movie release july1

 

செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. 

 

இப்படம் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்ட  நிலையில் தற்போது இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.