சூர்யா படத்தில் நாயகியாகும் ராஷி கண்ணா! 

rashi kanna

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து திரைக்கு வெளிவரத் தயாராக உள்ள படம் 'சூரரைப் போற்று'.இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். முதலில் கோடை விடுமுறையில் வெளியிடுவதாகப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கரோனா பீதியால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே ஹரி இயக்கத்தில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் 'அருவா' என்றொரு படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியிருந்தார் சூர்யா. இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கி, ஜூன் மாதத்தில் முடித்து தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்புக்குழு தெரிவித்திருந்தது. இவை அனைத்துமே கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கிறார் என்று பல நடிகைகளின் பெயர் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தது. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. ஊரடங்கால் ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடிய ராஷி கண்ணாவிடம் ஒரு ரசிகர், “உங்களுடைய அடுத்த படங்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

http://onelink.to/nknapp

அதற்குப் பதிலளித்த ராஷி கண்ணா "தமிழில் 'அரண்மனை 3' மற்றும் சூர்யா சார் - ஹரி சார் இணையும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் இரண்டு படங்கள் இருக்கிறது.கரோனா லாக்டவுன் முடிந்தவுடன் தான் என்ன நிலைமை என்பது தெரியவரும். அதற்குப் பிறகுச் சொல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 'அருவா' படத்தில் ராஷி கண்ணா மட்டுமின்றி வேறொரு முன்னணி நடிகையும் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

actor surya
இதையும் படியுங்கள்
Subscribe