/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/60_39.jpg)
சுந்தர் சி. இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘அரண்மனை’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகிவருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும், சுந்தர் சி, விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ரசவாச்சியே...' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கான வரிகளை மோகன் ராஜன் எழுத, சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். முன்னதாக வெளியான 'ராடடாபாடா...' என்ற பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து, யூடியூப் தளத்தில் 5 மில்லியன் பார்வைகளை நெருங்கும் நிலையில், தற்போது இரண்டாவது பாடலாக இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)