/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/341_13.jpg)
விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ். மேலும் கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் தங்க கட்டிகள் கடத்தியதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து அவர் வந்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 15 நாட்களில் அவர் நான்கு முறை துபாய்க்கு சென்று வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் தனது ஆடையில் 14.8 கிலோ எடையுள்ளதங்கக்கட்டிகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனால் சட்ட விரோதமாக தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
விசாரணையில்ஒவ்வொரு முறையும் அவர் துபாய் சென்று வந்ததும், தான் டி.ஜி.பி-யின் மகள் என்று சொல்லி பின்பு வீடு வரை காவல்துறை பாதுகாப்புடன் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த கடத்தலின் பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் யாராவது இருக்கிறார்களா என வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)