புர்ஜ் கலீஃபாவை பார்த்து கண்கலங்கிய தீபிகா படுகோன்!

ranveer singh starring 83 trailer featured on Dubai Burj Khalifa

1983ஆம் ஆண்டு கபில்தேவ்தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து ‘83’ என்ற படத்தை இயக்குநர் கபீர் கான் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கபில்தேவாகநடித்துள்ளார். இவருக்குஜோடியாக தீபிகா படுகோன்நடித்திருக்கிறார். நடிகர் ஜீவா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடித்துள்ளார். அணியின் மற்ற வீரர்களாக தஹீர் ராஜ் பாசின், சாகீப் சலீம், ஆமி விர்க், அம்ரிதா பூரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்பட்டத்தின்ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் இறங்கியுள்ள படக்குழு, உலகின் மிக உயரமான துபாய்புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ‘83’ படத்தின் ட்ரைலரைத் திரையிட்டுள்ளது. இதனைப் படக்குழுவினர் பார்த்து ரசித்தனர். அப்போது தனது காதலரான ரன்வீர் சிங்கை திரையில் பார்த்தவுடன் நடிகை தீபிகா படுகோன் கண்கலங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில்வைரலாகிவருகிறது. இதற்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ரெட் சீ திரைப்படவிழாவில் ‘83’ படத்தைப் பார்த்த பார்வையாளர்கள், எழுந்து நின்று கை தட்டி தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

83 movie ranveer singh ranveersingh deepikapadukone
இதையும் படியுங்கள்
Subscribe