/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/122_10.jpg)
'83' படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், திவ்யாங் தக்கர் இயக்கத்தில் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே, தீக்ஷ ஜோஷி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஆதித்ய சோப்ரா மற்றும் மணீஷ் சர்மா இருவரும் தயாரித்துள்ளனர். சமுதாயத்தில் ஆண் பெண் சம உரிமையை பற்றி இப்படம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' படம் மே 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் ரன்வீர் சிங் ரசிகர்களுக்கு ஒரு பம்பர் ஆஃபரைஅறிவித்துள்ளார். அதன்படி, 'ஜெயேஷ்பாய் ஜோர்தார்' படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும்நிச்சயம் அழுகை வரும், அப்படி வரவில்லைஎன்றால் டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்எனத்தெரிவித்துள்ளார். இதனால் திரையரங்குகளுக்கு அதிக கூட்டம் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)