பிரபல பாலிவுட் நடிகரும் நடிகை தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங் மும்பையிலுள்ள பிரபல அபார்ட்மெண்டில் ஒரு வீட்டை ரூ 7.25 லட்சத்திற்கு மாத வாடகைக்கு எடுத்துள்ளார்.

மும்பையிலுள்ள பிரபாதேவி பகுதியில் பியுமொண்ட் என்னும் அபார்ட்மெண்ட் இருக்கிறது. இதில்தான் ரன்வீர் சிங் ஒரு பிளாட்டை அதிக பணத்திற்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார். இதே அபார்ட்மெண்டில் 33வது மாடியில் நான்கு அறைகள் கொண்ட ஒரு வீட்டை கடந்த 2010ஆம் ஆண்டில் சுமார் 16 கோடிக்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2018ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதன்பின் இருவரும் தங்களின் படங்களில் நடிப்பதில் பிஸியாகிவிட்டனர். இந்நிலையில் தீபிகா வீடு இருக்கும் அதே அபார்ட்மெண்டில் வீடு ஒன்றை ரன்வீர் மூன்று வருடத்திற்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார். முதல் இரண்டு வருடங்களுக்கு மாத வாடகையாக ரூ.7.25 லட்சம் கொடுக்க இருப்பதாகவும், கடைசி வருடம் மாதம் ரூ. 7.97 லட்சம் வாடகையாக கொடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ரன்வீர் சிங் 83 என்ற கபில் தேவ் பயோபிக் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல தீபிகா படுகோன் நடித்த சப்பக் படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.