/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/90_22.jpg)
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவரான லலித் மோடி, பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இது தொடர்பாக இருவரும் கல்யாணம் செய்துவிட்டார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். பின்பு இந்த சர்ச்சைகளை தெளிவு படுத்தும் வகையில் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் "நான் யாரையும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை" எனக் லலித் மோடி தெரிவித்திருந்தார்.
இதனிடையே இவரது பதிவு இணையத்தில் வைரலாக, ரசிகர்கள் பலரும் சுஷ்மிதா சென்-னை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் சுஷ்மிதா சென். அந்த பதிவில் "அறிவாளிகள் என்று அழைக்கப்படுபவர்கள், தங்கள் அறியாமையால் தரம் தாழ்ந்தும் சில சமயங்களில் வேடிக்கையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு பரிதாபமாகவும் மகிழ்ச்சியற்றதாகவும் மாறிவருகிறது என்பதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது" என உள்ளிட்ட சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.
சுஷ்மிதா சென்னின் இந்த பதிவிற்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரன்வீர் சிங், பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் சுஷ்மிதா சென்னிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)