ranveers wingh

பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகர்ரன்வீர் சிங். இவர் மும்பை பாந்த்ரா பகுதியில் நேற்று தனது சொகுசுக் காரில் சென்றபோது, அவரது காருக்குப் பின்னால் அதிவேகத்துடன் ஒரு மோட்டார் பைக் வந்து கொண்டிருந்தது.

Advertisment

அவருடைய காரை முந்திச் செல்லும் நோக்கில் வேகமாக முன்னேறிய அந்த பைக், ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்து, ரன்வீர் சிங்கின் காரில் பலமாக உராய்ந்தது. அப்போதும் அந்த பைக்கை ஓட்டிவந்த இளைஞர் நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டார். இதில் ரன்வீர் காரின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் ரன்வீர் சிங்குக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்த சிலர் மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில், ரன்வீர் சிங், வெளியில் வந்து காரின் சேதத்தைப் பார்த்து மீண்டும் காரில் ஏறிச் செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.