Advertisment

அச்சு அசல் கபில் தேவ்வாக மாறிய ரன்வீர் சிங்..! வைரலாகும் புகைப்படம்

ரிலையன்ஸ் எண்டர்டைன்மென்ட் மற்றும் தீபிகா படுகோனே, சாஜித் நதியாத்வாலா, கபீர் கான், நிகில் திவேதி, விஷ்ணு இந்தூரி, 83 பிலிம்ஸ் லிட் மற்றும் ஃபாண்டம் பிலிம்ஸ் ஆகியோர் இணைந்து பிரமாண்டமான தயாரிக்கும் படம் '83'. 1983ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்ததை மையமாக வைத்து உருவாகும் இந்த பயோபிக் படத்தில் இந்திய கேப்டன் கபில் தேவ்வாக ரன்வீர்சிங் நடிக்கிறார். கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபத்திரத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

Advertisment

83

மேலும் தாஜீர் பாசின் சுனில் கவாஸ்கராக நடிக்க, ஹார்டி சாந்து மதன்லாலாக நடிக்க, சகீப் சலீம் மொஹிந்தர் அமர்நாத்தாக நடிக்க, அம்மி வீர்க் பல்வீந்தர் சிங் சாந்துவாக நடிக்க, ஜீவா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தாக நடிக்க, சிராக் படீல் சந்தீப் படீலாக நடிக்க, சாஹில் கட்டார் சையது கிர்மானியாக நடிக்க, ஆதிநாத் கோத்தரே திலீப் வெங்சர்காராக நடிக்க, தைர்யா கார்வா ரவி சாஸ்திரியாக நடிக்க, டின்கர் சர்மா கீர்த்தி ஆஸாத்தாக நடிக்க, ஜதின் சர்மா யஷ்பால் ஷர்மாவாக நடிக்க, நிஷாந்த் தஹியா ரோஜர் பின்னியாக நடிக்க, ஆர் பத்ரி சுனில் வால்சன்னாக நடிக்க, போமன் இரானி பாரூக் என்ஜினியராக நடிக்க, பங்கஜ் திரிபாதி பி ஆர் மான் சிங்காக நடிக்க, தீபிகா படுகோனே ரோமி கபில்தேவாக நடிக்கும் இப்படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார். இந்நிலையில் '83' திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்துள்ளனர்.

Advertisment

இதற்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டனர். அது டுன்பிரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு புகைப்படம் ஆகும். அந்த போட்டி மிகவும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றும் கிரிக்கெட் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் அந்த போட்டியானது எந்த ஒரு தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்பப்படவும் இல்லை, பதிவு செய்யவும் பட்டிருக்கவில்லை என்ற சூழலிலும் ரன்வீர் சிங்கின் ஒரு வியத்தகு ஒப்பனை, அச்சு அசல் கபில்தேவை ஒத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் '83' படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலகெங்கும் திரைக்கு வரவிருக்கிறது.

83 movie kapil Dev
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe