Advertisment

முதல் முறையாக ரஜினியுடன் நடிக்கும் முன்னணி பாலிவுட் நடிகர்

ranveer sing in thalaivar 171

ரஜினிகாந்த்தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இதனிடையே, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தை தொடர்ந்து 171வது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கத்திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பின்பு சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் அவரிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார்.

Actor Rajinikanth lokesh kanagaraj ranveer singh Thalaivar 171
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe