பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங், புதிதாக நடித்து வரும் படம் ‘துரந்தர்’. பி62 ஸ்டுடியோஸ் புரொடைக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் வழங்குகிறது. ஆதித்யா தார் இயக்கும் இப்படத்தில் சஞ்சய் தத், அக்ஷயே கண்ணா, மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தொடர்பான முன்னோட்டம் சமீபத்தில் வெளியானது.   

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு லடாக் பகுதியில் நடந்து வந்தது. அந்த வகையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட 120 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 17ஆம் தேதி நடந்த படப்பிடிப்பின் போது, இரவு உணவை சாப்பிட்ட படக்குழுவினர் வயிற்று வலியாலும் வாந்தி எடுத்தும் தலைவலியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 600 நபர்கள் அன்றைய படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் உடல்நலம் குறித்தும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். 

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் உடல்நிலை இப்போது சீராக இருப்பதாகவும், விரைவில் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.