Advertisment

ஆடையின்றி நிர்வாணமாக ஃபோட்டோஷூட் - பரபரப்பை கிளப்பிய ரன்வீர் சிங்

ranveer latest photoshoot goes viral on internet

Advertisment

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் ரன்வீர் சிங். இவர் தற்போது 'ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்' தயாரிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவாகும் 'சர்க்கஸ்' படத்தில் நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனிடையே 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் நடிக்கிறார். 'தர்மா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரிக்கும் இப்படத்தை கரண் ஜோகர் இயக்குகிறார். ரன்வீர் சிங் நடிப்பது மட்டுமின்றி ஃபேஷன் மற்றும் மாடலிங்கிலும் அதிக கவனம் செலுத்தி வருபவர்.

இந்நிலையில் ரன்வீர் சிங் ஒரு மேகசின் அட்டை படத்திற்காக ஆடை இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. ரசிகர்கள் பலரும் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக கமெண்ட் செய்தும், பலர் இதனை விமர்சித்தும் கருத்து கூறி வருகிறார்கள்.

இதே போல் சில ஆண்டுகளுக்கு முன்னர் பர்ட் ரெனால்ட்ஸ் என்ற அமெரிக்க நடிகர் இந்த மேகசினின் அட்டை படத்திற்காக நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பர்ட் ரெனால்ட்ஸை பார்த்து இன்ஸ்பைர் ஆகி தான் ரன்வீர் சிங் இந்த போஸை கொடுத்துள்ளார் எனப் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ranveer singh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe