deepika

நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்கும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் நவம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் இத்தாலியில் நடக்கவிருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து ரன்வீரும், தீபிகாவும் இத்தாலி புறப்பட்டு சென்றனர். இதையடுத்து நேற்று அங்கு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதனைத் தொடர்ந்து லோக் கோமா பகுதியில் உள்ள வில்லா டெல் பால்பியனெல்லோவில் தீபீகா படுகோனே - ரன்வீர் சிங் திருமணம் நடந்து முடிந்தது. திருணத்தை ஒட்டி லேக் கோமா பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

திருமணத்துக்கு வந்தவர்களின் செல்போன்களின் கேமராவில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. திருமணத்தில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் என இருவருக்கும் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மேலும் திருமண பரிசுகளை அறக்கட்டளைக்கு அளிப்பதாக இருவரும் அறிவித்து உள்ளனர். மேலும் இந்தியா திரும்பிய பிறகு நடிகர், நடிகைகளை அழைத்து மும்பையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.