Advertisment

இளையாராஜாவுடன் பா.ரஞ்சித் திடீர் சந்திப்பு

ranjith meets iaiyaraaja

Advertisment

இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் டப்பிங் பணிகளை முடித்தனர். போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இப்படம் அடுத்த மாதம்ஜனவரி 2024ல் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தற்போது தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ரஞ்சித், கலையை ஜனநாயகப்படுத்தும் நோக்கோடு ஆண்டுதோறும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டு மொத்தம் 3 இடங்களில் 5 நாட்கள் நடக்கிறது. வருகிற 23, 24, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. அதற்கான பணிகளிலும் ரஞ்சித் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் திடீரென இளையராஜாவை சந்தித்துள்ளார் ரஞ்சித். அவருக்கு ஒரு புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். அப்போது எடுக்கபட்ட புகைப்படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “எண்ணமெல்லாம் வண்ணமம்மா...” என குறிப்பிட்டுள்ளார்.

Ilaiyaraaja pa.ranjith
இதையும் படியுங்கள்
Subscribe