rangoli first look poster released

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ரங்கோலி'. பள்ளி வாழ்க்கையைச்சொல்லும் இப்படத்தில் மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ்நாயகனாக அறிமுகமாகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுந்தரமூர்த்தி இசைப் பணிகளை மேற்கொள்கிறார்.

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ், நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா, கார்த்திக் ரத்னம் ஆகியோர்இணைந்து வெளியிட்டனர். இந்தப் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment