rangaraj pandey

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்திலும்நடித்துள்ள படம் ‘க/பெ ரணசிங்கம்’. இந்தப் படத்தை பெ.விருமாண்டி இயக்கியுள்ளார்.

Advertisment

Advertisment

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரங்கராஜ் பாண்டே, இந்தப் படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்தின் இசைக்கோர்ப்பின்போது பார்த்துவிட்டு, படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ரங்கராஜ் பாண்டே தனது சமூக வலைத்தளப்பதிவில், "ஜிப்ரானிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரின் அட்டகாசமான நடிப்பை நான் தனிப்பட்ட முறையில் பார்த்தேன். எல்லாப் பெருமைகளும் பெ.விருமாண்டியையும் தயாரிப்பாளரையுமே சேரும்" என்று தெரிவித்துள்ளார்.

ரங்கராஜ் பாண்டேவின் இந்தப் பதிவுக்கு தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ் அவரது சமூக வலைத்தளப் பதிவில் "ரங்கராஜ் பாண்டே... உங்களது கதாபாத்திரமும் தனித்து நிற்கும் என்று உறுதியாகச் சொல்வேன். நம் அத்தனை பேரின் முயற்சியையும் மக்கள் பார்க்கும் நாளை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.