Skip to main content

அஜித்தின் அடுத்த திட்டம்! - ரங்கராஜ் பாண்டே  வெளியிட்ட சீக்ரெட்

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

விஸ்வாசம் படத்தின் ஹிமாலய வெற்றியை அடுத்து நடிகர் அஜித், எச். வினோத் இயக்கத்தில்‘நேர்கொண்ட பார்வை’என்ற படத்தில் நடித்தார். அது பிங்க் என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. அஜித்தின் படங்கள் வழக்கமாக ஆந்திராவில்தான் ஷூட்டிங் எடுக்கப்படும் அதுபோல இப்படமும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் மிகவும் குறைவான நாட்களிலேயே எடுத்து முடிக்கப்பட்டது. 
 

rangaraj

 

 

மேலும் இந்த படத்தில் அஜித்துடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரங்கராஜ் பாண்டே அஜித்துடன் இருபது நாட்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளார்.
 

இந்நிலையில் அஜித்தின் அடுத்த பிளான் என்ன என்று ரங்கராஜ் பாண்டே தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ அஜித்திற்கு அரசியலுக்கு வருவதற்கான ஆர்வம் இல்லை, ஆனால் அரசியல் பற்றியான ஆழ்ந்த சிந்தனை இருக்கிறது. அவருடைய அடுத்த பிளானாக என்னவாக இருக்கிறது என்றால். இளைஞர்களுக்கான ஒரு மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒன்றை தொடங்க வேண்டும் என்பதாகதான் இருக்கிறது. அது கண்டிப்பாக உலகம் தரம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுகருத்தும் இல்லை” என்று கூறியுள்ளார்.
 

முன்னதாக நடிகர் அஜித் சென்னை அண்ணா பல்கலைகழக ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் டக்‌ஷா குழுவுக்கு வழிநடத்துபவராக அஜித் செயல்பட்டார். அக்குழு உலகளவில் தங்களுடைய கண்டுபிடிப்பை கொண்டுசேர்த்தது குறிப்பிடத்தக்கது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகள் விசயத்தில் ‘விஸ்வாசம்’ கேரக்டர் தான்; அஜித்தை புகழ்ந்து தள்ளிய அபிராமி வெங்கடாசலம்!

Published on 01/03/2023 | Edited on 01/03/2023

 

 Abhirami venkatachalam interview

 

‘இரு துருவம்’ வெப் சீரிஸில் நடித்துள்ள அபிராமி வெங்கடாசலம் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம்; அப்போது அவர் பல சர்ச்சையான விசயங்களுக்கு விளக்கம் அளித்தார். அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.

 

'இரு துருவம்' வெப் சீரிஸ் குறித்த அனுபவங்கள்?

நான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிப்பதற்கு முன்பே இரு துருவம் வெப் சீரிசில் கமிட்டானேன். அதுதான் என்னுடைய கரியர் தொடங்கிய நேரம். நல்ல ஒரு கிரைம் திரில்லர் அது. முதல் சீசனில் எப்படியாவது நான் செலக்ட் ஆகிவிட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். அதில் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம்.

 

நிஜமான அபிராமியை எப்போதாவது மிஸ் செய்கிறீர்களா?

நான் மனதளவில் பலமான ஒரு பெண்ணாக இருந்தாலும் எனக்குள் இருக்கும் குழந்தைத்தனம் எப்போதும் அப்படியே தான் இருக்கிறது. நிச்சயம் பல விஷயங்களில் நான் மாறியிருக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவை அனைத்துமே வளர்ச்சியாகத் தான் தெரிகின்றன.

 

இந்த இன்டர்நெட் உலகில் நெகட்டிவிட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

அதை வளர்ச்சிக்கான அடிப்படையாகத் தான் பார்க்கிறேன். அடிப்படையில் எனக்கு ஜனநாயகம் பிடிக்கும். இங்கு உரையாடல் அவசியம். எனவே மனதுக்குத் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதில் தவறில்லை. சிவராத்திரியில் நடனமாடியது, டாட்டூ குத்தியது எல்லாம் சர்ச்சையாகின. ஆனால் அது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் நம்மால் மூச்சுவிடக் கூட முடியாது. சிவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக என்னால் வாழ முடியாது.

 

இந்தக் காலத்தில் உறவுகள் எப்படி மதிப்பிடப்படுகின்றன என்று நினைக்கிறீர்கள்?

அனைத்து உறவுகளுமே இங்கு முக்கியம் தான். அவர்கள் தான் நம்முடைய வாழ்க்கையை அழகாக்குகின்றனர். நண்பர்களுக்காக நான் எதையும் செய்வேன். என்னுடைய அம்மா தான் எனக்கு எல்லாமே. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று உண்மையில் விரும்பிய ஒரு இதயம் என்னுடைய பாட்டி. 'ரட்சகன்' படத்தில் வரும் சுஷ்மிதா சென் கேரக்டர் தான் நிஜ வாழ்க்கையில் நான். எனக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். நெகட்டிவ் மனிதர்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. 

 

நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும்போது அஜித்திடம் கற்றுக்கொண்ட விஷயம் என்ன?

அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. அஜித் சார் மிகவும் எளிமையானவர். அமைதியானவர். அனைவரையும் மதிக்கக் கூடியவர். எல்லோருடனும் சமமாகப் பழகுவார். அவருடைய மகள் மீது அவர் கொண்டுள்ள அன்பு என்னை வியக்க வைத்தது. 'விஸ்வாசம்' படத்தில் நடித்த கேரக்டர் போல் தான் நிஜ வாழ்க்கையிலும் அவர் தன் மகள் மீது அன்பு செலுத்துகிறார். அவரிடம் மிகவும் பிடித்த விஷயம் அது.

 

 

Next Story

"ரங்கராஜ் பாண்டே தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது" - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு 

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

director sa chandrasekhar talk about rangaraj pandey

 

இயக்குநர் சரவணன் சுப்பையா இயக்கத்தில் கதிரவன் 'மீண்டும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் சரவணன் சுப்பையா அஜித் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற சிட்டிசன் படத்தையும், ஷியாம் நடிப்பில் வெளியான ஏபிசிடி ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது கதிரவன் நடிக்கும் 'மீண்டும்' படத்தை இயக்கியுள்ளார். இதில் கதிரவனுக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். இப்படத்திற்கு நரேன் பாலமுருகன் இசையமைக்க, ஹீரோ சினிமாஸ் சார்பில்  சி மணிகண்டன் தயாரிக்கிறார். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான தாக்குதலை இப்படத்தில் பேசியுள்ளனர்.

 

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பேரரசு, எஸ்.ஏ சந்திரசேகர், ரங்கராஜ் பாண்டே, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்," மீண்டும் சரவணன் சுப்பையா. திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவை விட்டு ஒதுங்கிட்டீங்களா இல்ல சினிமா ஒதுக்கி விட்டதா என்று தெரியவில்லை. சரவண சுப்பையா இயக்கிய 'சிட்டிசன்' படம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை பேசியது. சினிமா பொழுது போக்குக்காக எடுக்கிறோம்.  அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான்.  'சிட்டிசன்' படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சரவண சுப்பையா. 70. 80 களில் வெற்றியும் கொடுப்போம், தோல்வியும் கொடுப்போம். ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வார்கள். வாய்ப்புகள் தொடர்ந்து வரும். இப்போது ஒவ்வொரு படமும் சோதனையானது. ஒரு படம் சறுக்கினாலும் அவ்வளவுதான்  நம்மை மறந்துவிடுவார்கள்.  சரவணன் சுப்பையா 'மீண்டும்' படம் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். 

 

'சிட்டிசன்' இயக்குநராக மீண்டும் உங்களை கொண்டு வந்து நிறுத்தும்.  படத்தின் டிரைலர் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தில் ஹீரோவை கொடுமைப்படுத்தும் காட்சியும் இருக்கிறது, ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது. படத்தின் கதாநாயகன் கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்பவனை சினிமா கைவிடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலி போல் அது நம்மை கைவிடாது. ஏதாவது ஒரு விதத்தில் நம்மை பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும். இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறையாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன். செந்தூரப்பாண்டி படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு காதலா வீரமா என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக் கொடுத்தார். அதேபோல் நாஞ்சில் சம்பத்  இங்கு வந்திருக்கிறார். அவர் இருக்கும் மேடையில் நீ எப்படி தைரியமா பேசற என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது. அடுத்து பாண்டே வந்திருக்கிறார். திறமையானவர் ஆனால் வழிதவறி எங்கேயோ போய்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்தில் தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது" எனக் கூறியுள்ளார்.