/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/29_8.jpg)
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவில் வேகமெடுக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், ஓராண்டைக் கடந்தும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இடைப்பட்ட காலத்தில் பரவலின் வேகம் குறைந்திருந்த நிலையில், தற்போது கரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, அவரது அம்மா நீது கபூர் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ரன்பீர் கபூருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதுமருத்துவ சிகிச்சையில் உள்ள அவரது உடல்நலம், நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. உங்கள் அனைவரது அக்கறைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, ரன்பீர் கபூர் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)