ranbir kapoor

Advertisment

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ரன்பீர் கபூர், கடைசியாக சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்த 'சஞ்சு' திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 'சம்ஷீரா' மற்றும் 'பிரம்மஸ்த்ரா' என்னும் இரு படங்களில் நடித்து வருகிறார். அண்மையில்தான் அவரது தந்தை ரிஷி கபூர் காலமானார்.

இந்நிலையில், ரன்பீர் கபூர் போலவே முகம் மற்றும் உடல் தோற்றமுடையவராக ஜூனைத் ஷா என்பவர் கருதப்பட்டார். காஷ்மீரைச் சேர்ந்த இவர், சிறிது காலம் மும்பையில் மாடலிங்கிலும்பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள இலஹி பேஹ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜூனைத் ஷாவுக்கு கடந்த வியாழக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஜூனைத் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.